ஆஸ்கர் விருது போட்டிக்கு தகுதி பெற்ற ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா: எ லெஜண்ட் – சாப்டர் 1’
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா: எ லெஜண்ட் – சாப்டர் 1’ திரைப்படம், ஆஸ்கர் விருது போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளது.
வரும் மார்ச் மாதம் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ள 98-வது ஆஸ்கர் விருது விழாவிற்கான சிறந்த திரைப்படப் பிரிவில் போட்டியிடத் தகுதியான உலகம் முழுவதிலிருந்து 201 திரைப்படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அந்தப் பட்டியலில் ‘காந்தாரா: சாப்டர் 1’ இடம் பெற்றுள்ளது.
சிறந்த திரைப்படப் பிரிவுக்கு மட்டுமல்லாமல், சிறந்த நடிகர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரிவுகளிலும் இந்தப் படம் போட்டியிடத் தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் ‘காந்தாரா’வுடன் சேர்ந்து, அனுபம் கெர் இயக்கிய ‘தன்வி தி கிரேட்’ திரைப்படமும் இடம் பெற்றுள்ளது. இதற்கு முன்னர் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, ‘மகா அவதார் நரசிம்மா’ உள்ளிட்ட இந்திய திரைப்படங்களும் ஆஸ்கர் போட்டிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதி தேர்வு பட்டியல் வரும் 22ஆம் தேதி வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.