சபரிமலை ஐயப்பன் கோயில் தங்க கொள்ளை வழக்கு – முக்கிய சந்தேகநபர் கைது
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடந்த தங்க திருட்டு சம்பவத்தில் தொடர்பு இருப்பதாகக் கூறி, கோயிலின் தலைமை அர்ச்சகரை சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் சிறப்புப் புலனாய்வுக் குழு, தொடர்ச்சியான நடவடிக்கைகளின் மூலம் பலரை கைது செய்து வருகிறது. இதுவரை தேவசம் போர்டின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கோயிலின் தலைமை அர்ச்சகரான தந்திரி கண்டரரு ராஜீவருவை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். முன்னதாக கைது செய்யப்பட்ட உன்னி கிருஷ்ணனுடன் ராஜீவருவுக்கு நெருங்கிய பழக்கம் இருந்ததாகவும், தங்க திருட்டு சம்பவத்தில் அவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.