‘டிராகன்’ படப்பிடிப்பு தள்ளிவைப்பு: ஜூனியர் என்டிஆர்–பிரசாந்த் நீல் கருத்து வேறுபாடு?
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ஜூனியர் என்டிஆர், பிரபல இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கும் ‘டிராகன்’ படத்தில் நடித்து வருகிறார். அவருடன் ருக்மணி வசந்த் ஜோடியாக நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முன்பே முடிந்துள்ளது.
ஜூனியர் என்டிஆர் நடித்து வெளியான ‘தேவரா’ மற்றும் ‘வார் 2’ படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் அடுத்து வரும் படத்திற்கு அதிகமான கவனம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் ‘டிராகன்’ படத்தில் எடுத்த சில காட்சிகளில் திருப்தியளிக்காத அம்சங்கள் இருந்ததாகவும், இதனால் ஜூனியர் என்டிஆர் ஸ்கிரிப்ட்டில் சில மாற்றங்களை முன்மொழிந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதற்கு பிரசாந்த் நீல் ஏற்கவில்லை என்பது செய்திகள் வெளியானதால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
ஆனால், ஜூனியர் என்டிஆர் தரப்பு இதை மறுத்து, படத்தின் அடுத்த ஷெட்யூல் ஐதராபாத்தில் விரைவில் தொடங்கும் என்று உறுதி செய்துள்ளது.