அக்டோபரில் தினசரி யுபிஐ பரிவர்த்தனை ரூ.94 ஆயிரம் கோடி: புதிய சாதனை

Date:

அக்டோபரில் தினசரி யுபிஐ பரிவர்த்தனை ரூ.94 ஆயிரம் கோடி: புதிய சாதனை

இந்தியாவில் இணையவழி பண பரிவர்த்தனையில் யுபிஐ (UPI) முக்கிய பங்கு வகிக்கிறது; இது ஒட்டுமொத்த பரிவர்த்தனையின் 85% ஆகும். தற்போது யுபிஐ பரிவர்த்தனை நாளொன்று நாளுக்கு அதிகரித்து வருகிறது.

தீபாவளி பண்டிகை காரணமாக அக்டோபர் மாதத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 74 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இதே மாதிரி, கடந்த சில நாட்களில் தினசரி பரிவர்த்தனையின் மதிப்பு 6 முறை ரூ.1 லட்சம் கோடியை கடந்துள்ளது.

இந்த மாதம், சராசரி தினசரி யுபிஐ பரிவர்த்தனை மதிப்பு ரூ.94,000 கோடியாக உயர்ந்து புதிய சாதனை படைத்துள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதத்தைவிட 13% உயர்வு ஆகும்.

இந்திய தேசிய பணப்பட்டுவாடா கழகம் (NPCI) வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, இந்த மாதத்தின் இறுதிக்குள் மொத்த யுபிஐ பரிவர்த்தனை ரூ.28 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை பதிவு செய்யப்படலாம். இதுவரை ஒரு மாத அதிகபட்ச பரிவர்த்தனை ரூ.25 லட்சம் கோடி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

காவிரியில் நீர் திறப்பு 60,000 கன அடியாக அதிகரிக்க வாய்ப்பு: 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

காவிரியில் நீர் திறப்பு 60,000 கன அடியாக அதிகரிக்க வாய்ப்பு: 11...

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அணி 333 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அணி 333 ரன்களுக்கு...

பாஜகவின் ‘பி’ டீமாக லாட்டரி அதிபர் ஜோஸ் சார்லஸ் மார்டின் செயல்படுகிறார்” – நாராயணசாமி

“பாஜகவின் ‘பி’ டீமாக லாட்டரி அதிபர் ஜோஸ் சார்லஸ் மார்டின் செயல்படுகிறார்”...

கோயில் நிதி விவகாரம்: அனைத்து கோயில்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு

கோயில் நிதி விவகாரம்: அனைத்து கோயில்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப உயர் நீதிமன்றம்...