பராசக்தி திரைப்படத்தை இணையத்தில் சட்டவிரோத வெளியீட்டுக்கு தடை
சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி படத்தை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடாமல் இருக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா நடித்துள்ள, சுதா கொங்கரா இயக்கிய பராசக்தி திரைப்படம் நாளை திரையரங்கில் வெளியாக இருக்கிறது.
திரைப்பட தயாரிப்பு நிறுவனம், படத்தை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடப்படாமல் தடுக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த மனு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்னிலையில் விசாரிக்கப்பட்டது. அந்த சந்திப்பில் தயாரிப்பு நிறுவனம், முன்னணி நடிகர்களுடன் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படம் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானால் மீட்ட முடியாத நஷ்டம் ஏற்படும் என தெரிவித்தது.
இதையடுத்து, நீதிமன்றம் பராசக்தி படத்தை இணையதளங்கள் மற்றும் கேபிள் டிவிகளில் சட்டவிரோதமாக வெளியிடத் தடை விதித்து உத்தரவிட்டது.