வங்கதேசத்தில் இந்து இளைஞர் படுகொலை – முக்கிய இளைஞர் கைது
வங்கதேசத்தில் நடைபெற்ற இந்து இளைஞர் கொலை சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் மசூதியில் இமாமாக பணியாற்றி வந்தவர் என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் 18ஆம் தேதி, வங்கதேசத்தின் மைமன்சிங் மாவட்டம் பாலுகா பகுதியில் வசித்து வந்த தீபு சந்திர தாஸ் என்ற இந்து இளைஞர், வன்முறையில் ஈடுபட்ட கும்பலால் உயிருடன் தீ வைத்து கொடூரமாக கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து 150 பேரை குற்றவாளிகளாகக் குறிப்பிடும் வகையில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், முக்கிய சந்தேகநபரான யாசின் அராபத் என்பவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 12 நாட்களாக தலைமறைவாக இருந்த யாசின் அராபத், ஒரு மசூதியில் இமாமாக பணியாற்றி வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கைது சம்பவம் வங்கதேசத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.