கிரிக்கெட் வீரர் அர்ஜூன் டெண்டுல்கருக்கு மார்ச்சில் திருமண ஏற்பாடுகள்?
இந்திய கிரிக்கெட் உலகின் நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கரின் மகனும் கிரிக்கெட் வீரருமான அர்ஜூன் டெண்டுல்கரின் திருமணம் எதிர்வரும் மார்ச் மாதத்தில் நடைபெற உள்ளது என்ற தகவல் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரவி காயின் மகளான சானியா சாந்தோக் என்பவருடன், அர்ஜூனின் திருமணம் மார்ச் 5ஆம் தேதி நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
கால்நடை மருத்துவராக பணியாற்றி வரும் சானியாவுடன், அர்ஜூனின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே நடைபெற்றதாகவும், திருமணச் சார்ந்த சடங்குகள் மார்ச் 3ஆம் தேதி முதல் தொடங்கும் எனவும் அவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மும்பையில் நடைபெறவுள்ள இந்த திருமண விழாவில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.