பெங்களூரு – விஜயவாடா என்எச்-544ஜி நெடுஞ்சாலை – 24 மணி நேரத்தில் 29 கி.மீ. சாலை அமைத்து கின்னஸ் உலக சாதனை
பெங்களூரு மற்றும் விஜயவாடா நகரங்களை இணைக்கும் என்எச்-544ஜி தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தில், ஒரே 24 மணி நேரத்தில் 29 கிலோமீட்டர் நீளத்திற்கு சாலை அமைத்து, தேசிய நெடுஞ்சாலை கட்டுமானத் துறையில் கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு – விஜயவாடா இடையிலான இந்த தேசிய நெடுஞ்சாலைப் பணிகள், ரூ.19,320 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சத்யசாய் மாவட்டத்தில் உள்ள புட்டபர்த்தி அருகே, 24 மணி நேரத்திற்குள் 28.95 கிலோமீட்டர் தூரத்திற்கு தொடர்ச்சியாக பிடுமினஸ் கான்கிரீட் பயன்படுத்தி சாலை அமைக்கும் பணிகள் நிறைவேற்றப்பட்டன.
ஒரே நாளில் இடைவிடாது மேற்கொள்ளப்பட்ட இந்த சாலைப் பணியின் மூலம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாலை கட்டுமானத் துறையில் கின்னஸ் உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது.