ஆரோவில் நிர்வாகத்துடன் பிரிட்டன் துணைத் தூதர் ஆன்லைன் கலந்துரையாடல்
ஆரோவில் பவுண்டேஷன் செயலாளருடன் புதுச்சேரிக்கான பிரிட்டன் துணைத் தூதர் காணொலி மாநாடு மூலம் கலந்துரையாடல் நடத்தினார்.
ஆரோவில் பவுண்டேஷனுக்கு நேரில் வருகை தந்த பிரிட்டிஷ் துணைத் தூதர் ஹலிமா ஹாலந்து, ஆரோவில் பவுண்டேஷன் செயலாளரும், குஜராத் மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலாளருமான டாக்டர் ஜெயந்தியுடன் இணைய வழியாக ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த சந்திப்பின்போது, ஆரோவில் பவுண்டேஷனின் உலகளாவிய தொடர்புகளை மேம்படுத்துவது குறித்து இருதரப்பும் விரிவாக விவாதித்தனர். குறிப்பாக, இளைஞர் மற்றும் கல்வி பரிமாற்ற திட்டங்கள், ஸ்டார்ட்அப் வளர்ச்சி, நிலைத்த வளர்ச்சி தொடர்பான மாநாடுகள், மனித ஒற்றுமையை மையமாகக் கொண்ட ஆராய்ச்சி மையம், தொழில்முறை கல்வி மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு போன்ற அம்சங்கள் குறித்து கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.
ஆலோசனையின் நிறைவில், ஆரோவில்லின் அதிகாரப்பூர்வ மாஸ்டர் திட்டத்தை பவுண்டேஷன் நிர்வாகிகள், பிரிட்டிஷ் துணைத் தூதர் ஹலிமா ஹாலந்திடம் வழங்கினர்