மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெள்ளாவுக்கு ரூ.850 கோடி சம்பளம்!
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா, 2024–25 நிதியாண்டில் ரூ.850 கோடி சம்பளம் பெற்றுள்ளார்.
பில்கேட்ஸ் மற்றும் ஸ்டீவ் பால்மரைத் தொடர்ந்து, சத்யா நாதெள்ளா 2014ஆம் ஆண்டு மைக்ரோசாப்டின் சிஇஓவாக பொறுப்பேற்றார். 2023–24 நிதியாண்டில் அவருக்கு ரூ.694 கோடி வழங்கப்பட்டிருந்த நிலையில், இவ்வாண்டில் அவரின் ஊதியம் பெருமளவில் உயர்ந்துள்ளது.
நாதெள்ளாவின் தலைமையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இதனால், உலகளவில் நிறுவனத்தின் மதிப்பு மேலும் உயர்ந்துள்ளது. இதுவே அவரின் சம்பள உயர்வுக்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
அவருக்குக் கிடைத்த மொத்த ஊதியத்தில் 90 சதவீதம் மைக்ரோசாப்ட் பங்குகள் மூலமாக வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக, அவருக்கு அடிப்படை சம்பளமாக 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹22 கோடி) வழங்கப்பட்டுள்ளது.