இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி தொலைபேசி உரையாடல் – இருநாடுகளின் நட்பு குறித்து ஆலோசனை
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதுகுறித்து சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, தனது நெருங்கிய நண்பரான நெதன்யாகுவுடன் பேசியது மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், நடப்பு ஆண்டில் இந்தியா–இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவையும், ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இருவரும் விரிவாக கருத்துப் பரிமாற்றம் செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.