மற்ற விலங்குகளுக்கு உயிரின் மதிப்பு இல்லையா? – தெருநாய் ஆதரவாளர்களிடம் உச்சநீதிமன்றம் கேள்வி
மற்ற உயிரினங்களுக்கு உயிர் இல்லையா? கோழிகள், ஆடுகள் உயிருடன் வாழ வேண்டிய அவசியமில்லையா? என தெருநாய் ஆதரவாளர்களை நோக்கி உச்சநீதிமன்றம் கேள்விகளை எழுப்பியுள்ளது.
வெறிநாய் கடியால் ஏற்படும் ரேபிஸ் நோய் காரணமாக நாட்டில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழ்நிலையில், இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தன்னிச்சையாக வழக்காக எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நாய்கள் நேரடியாகக் கடிக்காமல் இருக்கலாம் என்றாலும், அவற்றின் காரணமாக சாலை விபத்துகள் ஏற்படுகின்றன என்றும், சாலைகள், பள்ளிகள் மற்றும் கல்வி நிலையங்களின் அருகே நாய்கள் சுற்றித் திரிவதால் என்ன பயன் உள்ளது? என்றும் கடுமையாக கேள்வி எழுப்பினர்.