பல கோடி ஆண்டுகளாக நிலவை நோக்கி நகரும் நீர்துகள்கள்..!

Date:

பல கோடி ஆண்டுகளாக நிலவை நோக்கி நகரும் நீர்துகள்கள்..!

பூமியின் வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜன் மற்றும் நீர்துகள்கள் போன்ற சிறு அணுக்கள், பூமியின் காந்த சக்தியின் துணையுடன் பல கோடி ஆண்டுகளாக சந்திரனை நோக்கி பயணித்து வருவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பூமி மற்றும் சந்திரன் இடையிலான ஆழமான, சிக்கலான தொடர்புகள் குறித்து விஞ்ஞானிகள் நீண்ட காலமாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். நாம் இதுவரை கருதியதை விட, சந்திரனின் சூழலை உருவாக்குவதில் பூமி மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், பூமியின் வளிமண்டலத்தில் காணப்படும் நைட்ரஜன் மற்றும் நீர்துகள்கள் போன்ற அணுக்கள், பூமியின் காந்தப்புலத்தின் வழியாக கோடிக்கணக்கான ஆண்டுகளாக நிலவிற்கு கடத்தப்பட்டு வருவதாக ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

சூரிய காற்றின் அழுத்தத்தால் நகர்த்தப்படும் இந்த அணுக்கள், விண்வெளியில் உருவாகும் ‘காந்த பாதை’ (Magnetic Highway) வழியாக நிலவின் மேற்பரப்பை அடைந்து அங்கே தங்கிக் கொள்கின்றன என்றும் விஞ்ஞானிகள் விளக்குகின்றனர். இத்துகள்களின் மூலம் சந்திரனில் நீர் மற்றும் ஆக்சிஜன் உருவாகும் வாய்ப்புகள் குறித்து தற்போது தீவிரமான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஒப்பீடு: 2026 மீனவப் பெண்கள் வாக்குகள்… விஜய்யின் ‘விசில்’ மற்றும் பிரதமரின் ‘தாமரை’ இடையே ஒரு சுவாரஸ்யமான போட்டி…

2026 சட்டமன்றத் தேர்தல் களம் தற்போது ஒரு மும்முனைப் போட்டியிலிருந்து, பலமுனைத்...

பெண் வாக்கு வங்கியில் விஜய்யின் ‘விசில்’ சின்னம் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பல காரணங்கள்

2026 சட்டமன்றத் தேர்தலில் பெண்களின் வாக்குகள் தான் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் சக்தியாக...

பிரதமர் மோடியின் மதுரை ஆவேச முழக்கம்… ஆன்மீகம் மற்றும் கலாச்சார இணைப்பு… திமுக மீதான நேரடித் தாக்குதல்

பிரதமர் மோடியின் மதுரை ஆவேச முழக்கம் மற்றும் அவரது உத்திகள் தென்...