ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் – பிரான்ஸ் வெளியிட்ட காட்சிகள்
சிரியாவில் செயல்பட்டு வந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் தங்குமிடங்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் காணொளியை பிரான்ஸ் அரசு வெளியிட்டுள்ளது.
சிரியாவில் ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த அடுக்குக் குழிகள் மீது, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ராணுவப் படைகள் இணைந்து வான்வழித் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், பிரான்சின் ரஃபேல் வகை போர் விமானங்கள் தாக்குதல் நடத்தும் தருணங்கள், தீவிரவாதிகள் மறைந்து இருந்த பதுங்குமிடங்கள் வெடித்து சிதறும் காட்சிகள் அடங்கிய வீடியோவை பிரான்ஸ் அரசு பொதுமக்களுக்கு வெளியிட்டுள்ளது.