பாங்காங் த்சோ அருகே சீன ராணுவ முகாம் – தீவிர கண்காணிப்பில் இந்தியா | சிறப்பு தொகுப்பு

Date:

பாங்காங் த்சோ அருகே சீன ராணுவ முகாம் – தீவிர கண்காணிப்பில் இந்தியா | சிறப்பு தொகுப்பு

பாங்காங் த்சோ ஏரிக்கு அண்மையில், சீன ராணுவ வீரர்கள் தங்குவதற்கான புதிய முகாமை சீனா அமைத்து வருவதாக வெளியாகியுள்ள செயற்கைக்கோள் புகைப்படங்கள், இந்தியா–சீனா எல்லைப் பகுதிகளில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாங்காங் த்சோ ஏரி, புவியியல் ரீதியாக மிகப்பெரிய வளம் கொண்டதாக இல்லாவிட்டாலும், சுஷூல் அப்ரோச் எனப்படும் முக்கியமான நுழைவுப் பாதையுடன் இணைந்திருப்பதே இதன் மூலோபாய முக்கியத்துவத்தை அதிகரிக்கிறது.

மலைப்பகுதிகளால் சூழப்பட்ட இந்த எல்லை மண்டலத்தில், இந்திய நிலப்பரப்புக்குள் நுழைய சீனா பயன்படுத்தக்கூடிய முக்கிய வழியாக சுஷூல் அப்ரோச் பகுதி கருதப்படுகிறது. இதன் காரணமாகவே, பாங்காங் த்சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகள் வழியாக சீனா பலமுறை ஊடுருவல் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக இந்திய ராணுவம் முன்பே உறுதி செய்துள்ளது.

1962ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா–சீனா போரின்போது, சுஷூல் அப்ரோச் பகுதி முக்கிய போர்க்களமாக இருந்தது. அக்காலகட்டத்தில், முதலில் சிரிஜாப் பகுதியை இழந்த இந்திய படைகள், பின்னர் 1962 அக்டோபர் 22ஆம் தேதி பாங்காங் த்சோ ஏரியின் வடக்கு கரைப் பகுதியின் முழுக் கட்டுப்பாட்டையும் இழந்தன.

அதேபோல், ஏரியின் தெற்கு கரையில் உள்ள யூலா பகுதியில் அமைந்திருந்த இந்திய ராணுவ முகாம்களையும் விலக்கிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

1999 கார்கில் போரின் போது, இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் விஜய்’ நடவடிக்கையின் கீழ் பாகிஸ்தானுடன் போரில் ஈடுபட்டிருந்த சூழலை பயன்படுத்திக் கொண்ட சீனா, பாங்காங் த்சோ ஏரிக்கரையில் இந்திய எல்லைக்குள் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை அமைத்ததாகவும் கூறப்படுகிறது. இவ்வளவு மூலோபாய முக்கியத்துவம் கொண்ட பகுதியில்தான் தற்போது புதிய பதற்றம் உருவாகியுள்ளது.

பாங்காங் த்சோ ஏரிக்கு அருகாமையில், சீனா ராணுவ முகாம் அமைக்கும் பணிகளை வேகப்படுத்தியுள்ளது. இது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அந்தப் புகைப்படங்களின் அடிப்படையில், கப்பல் தங்குமிடங்கள், ராணுவ வீரர்கள் தங்கும் வசதிகள் உள்ளிட்ட கட்டமைப்புகள், முன்னையதை விட நான்கு மடங்கு வேகத்தில் அமைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை சீனாவின் கட்டுப்பாட்டிலுள்ள நிலப்பரப்புக்குள் இருந்தாலும், பாங்காங் த்சோக்கு மிக அருகில் இருப்பது பாதுகாப்பு நிபுணர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்த நடவடிக்கைகள் எதிர்காலத்தில் எல்லை உரிமை கோரல் தொடர்பான புதிய சிக்கல்களுக்கு வழிவகுக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஒருபுறம், இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் மேம்பட்டு வரும் நிலையில், மறுபுறம் சீனாவின் இந்த ராணுவ கட்டமைப்பு நடவடிக்கைகளை இந்தியா தீவிரமாக கண்காணித்து வருகிறது.

உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் (LAC) தற்போது மீண்டும் ரோந்து பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், எல்லை மீறல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் சீனாவுக்கு இந்தியா தக்க பதிலடி அளிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

படுகர் இன மக்களுடன் இணைந்து ஹெத்தையம்மன் கோயிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் வழிபாடு

படுகர் இன மக்களுடன் இணைந்து ஹெத்தையம்மன் கோயிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன்...

செல்போன் திருடனை கன்னத்தில் அறைந்த முதியவர் – வைரலாகும் அதிரடி காட்சி

செல்போன் திருடனை கன்னத்தில் அறைந்த முதியவர் – வைரலாகும் அதிரடி காட்சி திண்டுக்கல்...

மாணவர் சேர்க்கையில் பாகுபாடு குற்றச்சாட்டு – ஜம்முவில் உள்ள மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து

மாணவர் சேர்க்கையில் பாகுபாடு குற்றச்சாட்டு – ஜம்முவில் உள்ள மருத்துவக் கல்லூரியின்...

அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸின் இல்லம் மீது தாக்குதல் – சம்பவத்தின் பின்னணி என்ன?

அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸின் இல்லம் மீது தாக்குதல் –...