ஆரோவில்லில் நடைபெறும் ஆன்மிக மற்றும் மேம்பாட்டு பணிகளை நேரில் ஆய்வு செய்த நாடாளுமன்ற நிலைக்குழு
புதுச்சேரியை ஒட்டியுள்ள ஆரோவில்லில் செயல்பட்டு வரும் ஆன்மிக செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி திட்டங்களை, நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் நேரடியாக சென்று ஆய்வு செய்தனர்.
நுகர்வோர் நலன், உணவு வழங்கல் மற்றும் பொது விநியோக அமைப்புகளுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள், ஆரோவில்லில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்வதற்காக வருகை தந்தனர்.
யூனிட்டி பெவிலியனில் நடைபெற்ற ஆலோசனை அமர்வில் கலந்துகொண்ட குழுவினரிடம், காணொளி இணைப்பின் மூலம் உரையாடிய ஆரோவில் அறக்கட்டளையின் செயலர் ஜெயந்தி எஸ். ரவி, அங்கு செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
இந்த சந்திப்பின் போது, ஆரோவில் நிர்வாகம் மேற்கொண்டு வரும் செயல்பாடுகளை எம்.பி. ரம்பன் மொக்காரியா மற்றும் எம்.எல்.ஏ. ஹரிபாய் படேல் ஆகியோர் பெரிதும் பாராட்டினர்.