ரூ.28 கோடிக்கு விற்பனையான டுனா மீன்!
ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் உள்ள முக்கிய மீன் சந்தையில், டுனா மீன் ஒன்று பல கோடி ரூபாய்க்கு ஏலம் போனது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஓமா கடல் பகுதியில் பிடிக்கப்பட்ட உயர்தர புளூஃபின் டுனா மீன், வணிக விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வரப்பட்டது.
அதிக சுவை மற்றும் சிறப்பான தரத்துக்காக உலகளவில் புகழ்பெற்ற இந்த வகை மீனை வாங்குவதற்கு எப்போதும் கடும் போட்டி நிலவி வருகிறது. அந்த வகையில், 234 கிலோ எடை கொண்ட இந்த டுனா மீன் சுமார் ரூ.28 கோடி மதிப்பில் ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.