மகாராஷ்டிராவில் ஒவைசி பங்கேற்ற கூட்டத்தில் குழப்பம் – கட்டுப்படுத்த போலீசார் லத்திச்சார்ஜ்
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற அசாதுதீன் ஒவைசி கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில், கடும் நெரிசலும் குழப்பமும் ஏற்பட்டதைத் தொடர்ந்து, போலீசார் தொண்டர்களை கட்டுப்படுத்த தடியடி நடத்தினர்.
அகோலா மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு, அகில இந்திய மஜ்லீஸ்–இ–இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி சார்பில் இந்தப் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் உரையாற்ற வந்த கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசியை அருகில் இருந்து பார்க்கவும், அவருடன் செல்ஃபி எடுக்கவும் முயன்ற தொண்டர்கள், ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு மேடையை நோக்கி முன்னேறினர்.
பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட தடுப்புகளை மீற முயன்றதால், நிலைமை கட்டுக்கடங்காமல் போன நிலையில், போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.