சீனாவை பின்னுக்கு தள்ளி உலக அளவில் அரிசி உற்பத்தியில் முதலிடம் பிடித்த இந்தியா
உலகின் மிகப்பெரிய அரிசி உற்பத்தி நாடாக இந்தியா தற்போது உருவெடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
டெல்லியில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர், இதுவரை முன்னிலையில் இருந்த சீனாவை இந்தியா கடந்து, சுமார் 150 மில்லியன் டன் அளவிலான அரிசி உற்பத்தி மற்றும் விநியோக அளவை எட்டியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், அதிக விளைச்சல் தரக்கூடிய புதிய விதை வகைகளை உருவாக்குவதில் இந்திய விவசாயத் துறை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த வளர்ச்சி, விவசாயிகளின் உழைப்புக்கும், அரசின் திட்டமிட்ட நடவடிக்கைகளுக்கும் கிடைத்த வெற்றியாகும் என சிவராஜ் சிங் சவுகான் குறிப்பிட்டார்.