வெனிசுலா விவகாரம் – உரையாடல் வழியாகவே தீர்வு தேவை : இந்தியா வலியுறுத்தல்
வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, அமைதியான பேச்சுவார்த்தை மூலமே பிரச்னைக்கு முடிவு காண வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், வெனிசுலாவில் சமீப காலமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் கவலை அளிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நாட்டில் அமைதியும், அரசியல் நிலைத்தன்மையும் நிலவ வேண்டும் என்பதற்காக, அனைத்துத் தரப்பினரும் கலந்துரையாடல் வழியாகவே முரண்பாடுகளை தீர்க்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
மேலும், வெனிசுலா மக்களின் பாதுகாப்பும் நலனும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாகவும், அந்த மக்களுக்கான தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.