ராஜஸ்தானில் ஒருங்கிணைந்த ராணுவ போர் பயிற்சி – காட்சிகள் வெளியீடு
ராஜஸ்தானில் இந்திய ராணுவ வீரர்கள் இணைந்து மேற்கொண்ட தீவிர போர் பயிற்சியின் காணொளி வெளியாகியுள்ளது.
படைத்துறையின் செயல்திறனை மேலும் மேம்படுத்தும் நோக்கில், சுமார் 79 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தளவாடங்களை வாங்க மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது.
இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உயர்தர பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்தச் சூழலில், ராஜஸ்தானின் நசிராபாத் பகுதியில் எந்தவிதமான அவசர சூழ்நிலையையும் சமாளிக்கும் வகையில், பைரவ் உள்ளிட்ட பல படைப்பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் ஒன்றிணைந்து ஒருங்கிணைந்த போர் பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்த பயிற்சி நடவடிக்கை, ராணுவத்தின் தயார் நிலையும் தாக்குத் திறனும் உயர்வதற்கான முக்கிய முயற்சியாக கருதப்படுகிறது.