புதிய ஆட்சி அமைக்கும் வரை வெனிசுலாவை அமெரிக்கா நிர்வகிக்கும் – டிரம்ப் அறிவிப்பு
வெனிசுலாவில் புதிய அரசு பொறுப்பேற்கும் வரை அந்த நாட்டின் நிர்வாகத்தை அமெரிக்கா மேற்கொள்ளும் என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி நாடு கடத்தப்பட்டதைத் தொடர்ந்து, இது தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப் இவ்வாறு கூறினார்.
அந்த சந்திப்பில் பேசிய அவர், தனது வழிநடத்தலின் கீழ் அமெரிக்க ஆயுதப்படைகள் வெனிசுலாவின் தலைநகரில் அபூர்வமான ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவித்தார். வான், நிலம் மற்றும் கடல் படைகளின் முழுமையான ஒருங்கிணைப்புடன் அமெரிக்க ராணுவம் மிகச் சிறப்பான தாக்குதலை நடத்தியதாகவும் அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, வெனிசுலாவில் புதிய அரசாங்கம் உருவாகும் வரை அந்நாட்டின் நிர்வாக பொறுப்பை அமெரிக்கா ஏற்கும் என்றும் டிரம்ப் அறிவித்தார்.