நெல்லை நெல்லையப்பர் திருக்கோயிலில் மகா ம்ருத்யுஞ்ஜய மந்திர ஜப வேள்வி கோலாகலம்
நெல்லை டவுனில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் திருக்கோயிலில் மகா ம்ருத்யுஞ்ஜய மந்திர ஜப வேள்வி சிறப்பாகவும், பக்தி முழங்கவும் நடைபெற்றது.
இந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில், ஆண்டுதோறும் நடைபெறும் இந்த ஆன்மிக நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, இவ்வாண்டு 25-ஆவது ஆண்டு மகா ம்ருத்யுஞ்ஜய ஜப வேள்வி நடத்தப்பட்டது.
இந்த புனித வேள்வியை செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச தேசிய சத்தியஞான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் தலைமையில்,
குரு மகா சன்னிதானம் செங்கோல் ஆதீனம்,
தருமபுரம் திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள்,
பரசமய கௌளரிநாத ஆதீனம் புத்தாத்மானந்த சரஸ்வதி பரமாச்சாரியார் சுவாமிகள்,
கள்ளக்குறிச்சி வேலாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள்,
நெல்லை மேலமடம் வித்தியேஸ்வர நடராஜ சிவாச்சாரியார் சுவாமிகள்,
நெல்லை இளைய பட்டம் உமா மகேஸ்வர சிவாச்சாரியார் சுவாமிகள்,
பனையூர் மாதாஜி உள்ளிட்டோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.
இந்த ஆன்மிக நிகழ்வில் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட சுமார் 10,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, மந்திர ஜபத்தில் ஈடுபட்டு வழிபாடு செய்தனர்.