வெனிசுலாவில் தங்கியுள்ள இந்தியர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் – மத்திய வெளியுறவுத்துறை எச்சரிக்கை
வெனிசுலாவில் நிலவி வரும் பதற்றநிலையை முன்னிட்டு அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில்,
“வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள சமீபத்திய சூழ்நிலை மாற்றங்களின் அடிப்படையில், அத்தியாவசியமற்ற காரணங்களுக்காக அந்த நாட்டிற்கு பயணம் செய்ய வேண்டாம் என இந்தியப் பிரஜைகள் கடுமையாக எச்சரிக்கப்படுகிறார்கள்.
தற்போது வெனிசுலாவில் உள்ள இந்தியர்கள் அனைவரும் மிகுந்த கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். அவசியம் இல்லாத சமயங்களில் வெளியில் செல்வதை தவிர்க்குமாறு வலியுறுத்தப்படுகிறது.
அதேபோல், கராகஸ் நகரில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்க, [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலும் அல்லது அவசர நிலைகளுக்கான தொலைபேசி எண் +58-412-9584288 (வாட்ஸ்அப் அழைப்புகளுக்குப் பயன்படும்) மூலமாகவும் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.