சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினரின் கடும் நடவடிக்கை – 14 நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்தல்
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் 14 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
பிஜாப்பூர் மற்றும் சுக்மா மாவட்ட எல்லைப் பகுதிகளில் நக்சலைட்டுகள் மறைந்திருந்து செயல்படுவதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, போலீசார் மற்றும் துணைப் பாதுகாப்புப் படையினர் இணைந்து அந்த பகுதிகளில் தீவிர தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்தனர்.
தேடுதல் வேட்டையின் போது, மறைவிடங்களில் இருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதற்கு பதிலடியாக பாதுகாப்புப் படையினரும் தாக்குதல் நடத்தினர்.
இந்த துப்பாக்கிச்சூட்டு மோதலில் மொத்தம் 14 நக்சலைட்டுகள் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் தொடர்ந்து பாதுகாப்பு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.