ஆங்கில புத்தாண்டு – கும்பகோணம் அபிமுகேஸ்வரர் ஆலயத்தில் தைவான் நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் சிறப்பு வழிபாடு
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு உலக அமைதி மற்றும் நலன் வேண்டி, கும்பகோணத்தில் அமைந்துள்ள அபிமுகேஸ்வரர் திருக்கோவிலில் தைவான் நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் சிறப்பு பூஜைகள் நடத்தினர்.
தைவானிலிருந்து வந்த பத்து பேர் அடங்கிய குழு, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பகோணம் மகாமக திருவிழாவின் வரலாற்றுச் சிறப்பையும், தீர்த்தங்களின் மகத்துவத்தையும் அறிந்து கொண்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, நாகப்பட்டினம் மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் பகுதியைச் சேர்ந்த நாடி ஜோதிடர் சக்தி வினோத் ராஜாவை அணுகி ஆலோசனை பெற்ற அவர்கள், கும்பகோணத்திற்கு வருகை தந்தனர்.
புத்தாண்டு நாளை முன்னிட்டு, மகாமக குளத்திற்கு அருகிலுள்ள அபிமுகேஸ்வரர் ஆலயத்தில் ஏகத்துவ மகா ருத்ர ஹோமம் நடத்தியும், கோபூஜை செய்தும் உலக நன்மைக்காக இறைவனை வேண்டி வழிபட்டனர்.