அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் அங்கமாகவே தொடர்கிறது
அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் பிரிக்கமுடியாத பகுதியாக இருப்பதில் எந்த வித மாற்றமும் இல்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெளிவுபடுத்தியுள்ளார்.
சென்னையில் உள்ள ஐஐடி வளாகத்தில் மாணவர்களுடன் நடைபெற்ற உரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், அருணாச்சல பிரதேசத்தில் நடந்த பெண் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், சர்வதேச போக்குவரத்து விதிகளை அனைத்து நாடுகளும் மதித்து பின்பற்ற வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தியாவின் பண்பாடு, மரபு மற்றும் வரலாற்று அடையாளங்களை உலகிற்கு எடுத்துச் சொல்வது ஒவ்வொரு இந்தியரின் பொறுப்பு என்றும், பண்டைய நாகரிக அடித்தளத்தில் இருந்து நவீன கால வளர்ச்சிக்குத் தகுந்த வகையில் இந்தியா முன்னேறி வருவதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
அத்துடன், வங்கதேசத்தில் நடைபெற உள்ள தேர்தல் அமைதியான மற்றும் ஜனநாயகமான முறையில் நடைபெற வேண்டும் என இந்தியா விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.