வங்கதேசத்தில் பாகிஸ்தான் சபாநாயகர் அயாஸ் சாதிக்குடன் ஜெய்சங்கர் சந்திப்பு
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் தேசிய அவை சபாநாயகர் அயாஸ் சாதிக்கை, மத்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நேரில் சந்தித்து உரையாடினார்.
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மறைவையடுத்து நடைபெற்ற இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள ஜெய்சங்கர் டாக்கா நகருக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
அந்த நிகழ்வின் போது, அங்கு இருந்த பாகிஸ்தான் தேசிய அவை சபாநாயகர் அயாஸ் சாதிக்குடன் ஜெய்சங்கர் சந்திப்பு நிகழ்ந்தது.
இந்த சந்திப்பு தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ள நிலையில், இது அரசு மட்டத்திலான பேச்சுவார்த்தை அல்ல, முழுக்க முழுக்க மரியாதை அடிப்படையிலான சந்திப்பே என தெரிவித்துள்ளது.