ஆங்கில புத்தாண்டு – நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் பக்தர்கள் திரண்டனர்
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.
நாமக்கல் நகரில் 18 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக எழுந்தருளியுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு அதிகாலையிலேயே பால், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட பலவகை நறுமண திரவியங்களைப் பயன்படுத்தி சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, சுமார் 3 டன் எடையுள்ள பல்வேறு வண்ண மலர்களால் புஷ்பாஞ்சலி அலங்காரம் செய்யப்பட்டு ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த விசேஷ வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.