சென்னை ஓபன் டென்னிஸ்: இந்திய வீராங்கனை ஸ்ரீவள்ளிக்கு வைல்டு கார்டு வாய்ப்பு
சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி வரும் அக்டோபர் 27 முதல் நவம்பர் 2 வரை நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மாயா ராஜேஷ்வரன் ரேவதி, சஹஜா யாமலபள்ளி, சுலோவேக்கியாவின் மியா போகன் கோவா, பிரான்ஸின் லூயிஸ் போய்சன் ஆகியோருக்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், பிரான்ஸ் வீராங்கனை லூயிஸ் போய்சன் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால், அவருக்கு பதிலாக இந்தியாவின் ஸ்ரீவள்ளி பாமிதிபதிக்கு வைல்டு கார்டு வழங்கப்பட்டுள்ளது.
23 வயதான ஸ்ரீவள்ளி, தற்போது உலக டென்னிஸ் தரவரிசையில் 377-வது இடத்தில் உள்ளார்.