ஆங்கில புத்தாண்டு 2026 – குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார் சிபிஆர்
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, குடியரசுத் துணை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்தார்.
இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், குடியரசுத் தலைவருக்கு புத்தாண்டு வாழ்த்துகளை சிபிஆர் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நாட்டின் வளர்ச்சி மற்றும் கட்டமைப்பில் அனைவரும் இணைந்து பொறுப்புடன் செயல்பட வேண்டிய காலகட்டம் இது என குடியரசுத் துணை தலைவர் கருத்து தெரிவித்ததாக அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.