சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பார் வெடிவிபத்து – 40 பேர் உயிரிழப்பு
சுவிட்சர்லாந்தில் ஆங்கில புத்தாண்டை வரவேற்றுக் கொண்டாடிய வேளையில் ஏற்பட்ட திடீர் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.
ஆல்ப்ஸ் மலைத் தொடரில் அமைந்துள்ள பிரபல சுற்றுலா நகரமான கிரான்ஸ்–மொன்டானாவில் உள்ள ஒரு பாரில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர். கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வெடிவிபத்து நிகழ்ந்ததும் அங்கிருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடினர். இருப்பினும், இந்த சம்பவத்தில் சிக்கி 40 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புத்தாண்டு கொண்டாட்டம் சோக நிகழ்வாக மாறிய இந்த விபத்து, அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் துயரையும் ஏற்படுத்தியுள்ளது.