தெலங்கானா : புத்தாண்டு வரவேற்பு – போலீசார் தீவிர ரோந்து
ஹைதராபாத் நகரில் ஆங்கிலப் புத்தாண்டு விழாக்கள் நடைபெற உள்ளதை முன்னிட்டு, காவல்துறையினர் இருசக்கர வாகனங்களில் ரோந்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர்.
ஹைதராபாத் தெற்கு மண்டல காவல் துணை ஆணையர் (DCP) கரே கிரண் பிரபாகர் தலைமையில் நடைபெற்ற இந்த ரோந்து பேரணி, சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தவும், எதிர்பாராத சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கவும் நகரின் முக்கிய சாலைகள் மற்றும் மக்கள் கூடும் பகுதிகளில் நடத்தப்பட்டது.
மது அருந்தி வாகனம் செலுத்துதல், சாலைகளில் ஆபத்தான பைக் பந்தயங்களில் ஈடுபடுதல், பெண்களைத் தொந்தரவு செய்வது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.