ஹூஸ்டன் மீனாட்சி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி திருவிழா!
ஹூஸ்டனில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று இறைவி தரிசனம் செய்தனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் பியர்லேண்ட் நகரில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோயில், அமெரிக்காவில் நிறுவப்பட்டுள்ள மூன்றாவது பழமையான இந்து ஆலயமாகக் கருதப்படுகிறது.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் கட்டிடக் கலையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ஆலயத்தில், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி உள்ளிட்ட முக்கிய இந்து திருவிழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஹூஸ்டன் மீனாட்சி அம்மன் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருநாள் மிகுந்த ஆன்மிக எழுச்சியுடன் விமரிசையாக அனுஷ்டிக்கப்பட்டது.
கோயில் தலைவர் சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டு இறைவியின் அருளைப் பெற்றனர்.