அதிர்ச்சியில் பாகிஸ்தான் : செனாப் நதியில் புதிய நீர்மின் திட்டத்துக்கு இந்தியா அனுமதி!

Date:

அதிர்ச்சியில் பாகிஸ்தான் : செனாப் நதியில் புதிய நீர்மின் திட்டத்துக்கு இந்தியா அனுமதி!

ஜம்மு–காஷ்மீரின் கிஷ்வார் மாவட்டத்தில் செனாப் நதியின் மீது அமைக்கப்படவுள்ள 260 மெகாவாட் திறன் கொண்ட துல்ஹஸ்தி இரண்டாம் கட்ட நீர்மின் திட்டத்திற்கு மத்திய அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது. இந்த முடிவு பாகிஸ்தானை கடும் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் பின்னணியை விளக்கும் செய்தி தொகுப்பு இதோ.

இந்தியா–பாகிஸ்தான் இடையிலான சிந்து நதி நீர் ஒப்பந்தம் 1960ஆம் ஆண்டு உலக வங்கியின் மேற்பார்வையில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் படி, சிந்து நதி படுகையில் உள்ள ஆறு முக்கிய ஆறுகளில், ரவி, பியாஸ், சட்லஜ் ஆகிய கிழக்கு நதிகளை இந்தியா முழுமையாக பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. இந்நதிகளின் நீர், விவசாயம், மின்சாரம் மற்றும் உள்நாட்டு தேவைகளுக்காக இந்தியா பயன்படுத்தலாம்.

அதே நேரத்தில், சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகிய மேற்கு நதிகள் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டன. இருப்பினும், பாகிஸ்தானுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், இந்த நதிகளில் இருந்து மின் உற்பத்தி, நீர்ப்பாசனம் மற்றும் போக்குவரத்து போன்ற நுகர்வு அல்லாத பயன்பாடுகளுக்கு இந்தியாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. குறிப்பிடத்தக்கது என்னவென்றால், இரு நாடுகளுக்கிடையே மூன்று போர்கள் நடைபெற்ற போதிலும் இந்த நீர் ஒப்பந்தம் தொடர்ந்து நடைமுறையில் இருந்தது.

2016ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்ட கிழக்கு நதிகளின் நீர் இனி பாகிஸ்தானுக்குச் செல்லாது என அறிவித்தார். 2019ல் நடைபெற்ற புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, கிழக்கு நதிகளின் நீரை முழுமையாக இந்தியா பயன்படுத்தும் வகையில் பல நீர்திட்டங்கள் வேகப்படுத்தப்பட்டன.

இதன் மூலம், ஒரு துளி கூட பாகிஸ்தானுக்குச் செல்லாத வகையில் இந்தியா நடவடிக்கை எடுத்தது. 2024 ஆகஸ்ட் மாதத்தில், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து மாற்றியமைக்க உள்ளதாக இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், இந்த ஒப்பந்தம் காலவரையறையின்றி நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனையடுத்து, ஜம்மு–காஷ்மீரில் செனாப் நதியில் உள்ள பகலிகார் மற்றும் சலால் அணைகளில் இருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது. அதேபோல், ஜீலம் நதியில் அமைந்துள்ள கிசன்கங்கா அணையிலிருந்தும் நீர்வெளியீடு நிறுத்தப்பட்டது.

சிந்து நதி படுகையில் ஆறு இடங்களில் புதிய அணைகள் கட்ட இந்தியா ஏற்கனவே திட்டமிட்டிருந்தது. ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டதன் பின்னர், ரட்லே, பர்சார், பகல் துல், குவார், கிரு, கீர்த்தாய் I & II உள்ளிட்ட நீர்மின் திட்டங்கள் துரிதப்படுத்தப்பட்டன. இதில் சவால்கோட் நீர்மின் திட்டம் “தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம்” என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரவி மற்றும் சட்லஜ் நதிகளில் புதிய அணைகள் கட்டுவதற்கான பணிகளை விரைவுபடுத்தவும், ஏற்கனவே உள்ள அணைகளின் நீர்மட்டத்தை உயர்த்தவும் மத்திய நீர்வளத் துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம், 1,856 மெகாவாட் திறன் கொண்ட சவால்கோட் நீர்மின் திட்டத்திற்காக தேசிய நீர்மின் சக்தி கழகம் (NHPC) சர்வதேச டெண்டர்களை அறிவித்தது.

இதன் தொடர்ச்சியாக, 2007ஆம் ஆண்டிலிருந்து NHPC மூலம் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் 390 மெகாவாட் துல்ஹஸ்தி நிலை–I திட்டத்தின் விரிவாக்கமாக துல்ஹஸ்தி நிலை–II உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான செலவு 3,200 கோடி ரூபாயைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், முதல் மின் நிலையத்திலிருந்து 3,685 மீட்டர் நீளமும், 8.5 மீட்டர் விட்டமும் கொண்ட சுரங்கப்பாதை மூலம் நீர் திருப்பப்படும். இரண்டாம் கட்டத்தில், குதிரை லாட வடிவில் அமைக்கப்படும் நிலத்தடி நீர்த்தேக்கத்தில் நீர் சேமிக்கப்படும். இதில் 130 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அலகுகள் அமைக்கப்பட்டு, மொத்த உற்பத்தி திறன் 260 மெகாவாட் ஆக உயர்த்தப்படும். இதனால் ஆண்டு மின்சார உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும்.

இந்தத் திட்டத்திற்காக 60.3 ஹெக்டேர் நிலம் தேவைப்படும் நிலையில், கிஷ்வார் மாவட்டத்தின் பென்ஸ்வார் மற்றும் பால்மர் கிராமங்களைச் சேர்ந்த 8.27 ஹெக்டேர் தனியார் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிபிபி கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஷெர்ரி ரஹ்மான்,

“இது சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் விதிகளை வெளிப்படையாக மீறுவதாகும். இந்தியா செனாப் நதியை ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது” என தனது எக்ஸ் (X) தளத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த வாரம், செனாப், ஜீலம் மற்றும் நீலம் நதிகளில் இருந்து பாகிஸ்தானுக்குள் வரும் நீர்வரத்து குறைந்துள்ளதாக இந்தியாவை குற்றம்சாட்டிய பாகிஸ்தான், இந்தியா தண்ணீரை ஒரு போர் ஆயுதமாக பயன்படுத்துகிறது எனக் கூறி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. மேலும், சிந்து நதி நீரோட்டத்தைத் தடுக்கும் எந்த நடவடிக்கையும் “போர்ச் செயலாக” கருதப்படும் என எச்சரித்துள்ளது.

இதற்கிடையே,

“பயங்கரவாதமும் வர்த்தகமும் ஒன்றாகச் செல்ல முடியாது”

“தண்ணீரும் இரத்தமும் ஒரே நேரத்தில் பாய முடியாது”

என்று பிரதமர் மோடி கூறியிருப்பது, எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதாக அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சைக்கிளில் உலகச் சுற்றுலா மேற்கொள்ளும் ஜெர்மன் பெண்!

சைக்கிளில் உலகச் சுற்றுலா மேற்கொள்ளும் ஜெர்மன் பெண்! சைக்கிளில் உலக நாடுகளைச் சுற்றி...

தெலங்கானா : புத்தாண்டு வரவேற்பு – போலீசார் தீவிர ரோந்து

தெலங்கானா : புத்தாண்டு வரவேற்பு – போலீசார் தீவிர ரோந்து ஹைதராபாத் நகரில்...

ஹூஸ்டன் மீனாட்சி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி திருவிழா!

ஹூஸ்டன் மீனாட்சி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி திருவிழா! ஹூஸ்டனில் அமைந்துள்ள...

அமீரக ஆயுதக் கப்பல்களை குறிவைத்து சவூதி வான்தாக்குதல்!

அமீரக ஆயுதக் கப்பல்களை குறிவைத்து சவூதி வான்தாக்குதல்! ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்காக ஐக்கிய அரபு...