திருப்பரங்குன்றம் பிரச்சினையில் நீதிமன்ற உத்தரவை புறக்கணித்து அரசியல் செய்யப்படுகிறது – தர்மேந்திர பிரதான் குற்றம் சாட்டு!
திருப்பரங்குன்றம் தொடர்பான விவகாரத்தில் நீதிபதி வழங்கிய தீர்ப்பை மதிக்காமல், சிலர் அரசியல் லாபத்திற்காக செயல்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்திற்கு வந்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், அங்கு சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்த அவர், கடந்த நான்கு ஆண்டுகளாக காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி மத்திய அரசின் சார்பில் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்க மறுத்து, சிலர் திட்டமிட்ட அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதைத் தடுக்க முயல்வோருக்கு சிவபெருமான் உரிய பாடம் கற்பிப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.