வங்கதேசத்தில் இந்து சமூகத்தினருக்கு எதிரான தாக்குதல்கள் தீவிரம்
வங்கதேசத்தில் இந்துக்களை குறிவைத்து நடைபெறும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், 10க்கும் அதிகமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
அண்டை நாடான வங்கதேசத்தில், சமீபத்தில் மாணவர் அமைப்பைச் சேர்ந்த தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். இந்த கொலைக்கு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியினர் காரணம் என குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, பல நகரங்களில் கலவரங்கள் வெடித்தன.
இந்த சூழ்நிலையில், குறிப்பாக இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. சமீபத்தில் மைமென்சிங் பகுதியைச் சேர்ந்த திபு சந்திர தாஸ் என்ற இந்து இளைஞர் கடுமையாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக, சிட்டாகோங் மற்றும் பிரோஜ்பூர் மாவட்டங்களில் 10க்கும் மேற்பட்ட இந்து குடும்பங்களின் வீடுகள் தீ வைத்து சேதப்படுத்தப்பட்டன.
இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்துக்களை குறிவைத்து நடைபெறும் தாக்குதல்களால் வங்கதேசம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.