‘விக்சித் பாரத் ஜி ராம் ஜி’ திட்டம் – மாநில அரசுக்கு ரூ.17,000 கோடி வருவாய்
‘விக்சித் பாரத் ஜி ராம் ஜி’ என்ற திட்டத்தின் மூலம் மாநில அரசுகளுக்கு சுமார் 17 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கவுள்ளதாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக SBI வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில், ‘விக்சித் பாரத் ஜி ராம் ஜி’ சட்டத்தின் அமலாக்கம் மாநில அரசுகளுக்கு இழப்பை ஏற்படுத்தாது; மாறாக நிதி ஆதாயத்தை வழங்கும் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், 2019 முதல் 2025 வரை உள்ள ஏழு ஆண்டுகளுக்கான காலகட்டத்தில் மத்திய அரசின் பங்களிப்பை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கணக்கிடும்போது, மாநிலங்களுக்கு மொத்தமாக 17 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநில அரசுகள் தங்களுக்கான 40 சதவீத நிதி பங்களிப்பை திறம்பட பயன்படுத்தினால், இதைவிட அதிகமான பலன்களை பெற முடியும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையிலான திருத்தப்பட்ட நிதி பகிர்வு முறை, மாநிலங்களை நிதி ரீதியாக பலவீனப்படுத்தும் அல்லது கூடுதல் கடன் சுமையை ஏற்படுத்தும் என்ற தகவல்கள் அடிப்படையற்றவை என்றும் SBI விளக்கமளித்துள்ளது.