புத்தாண்டு வரவேற்பு – டைம்ஸ் சதுக்கத்தில் உற்சாகக் கொண்டாட்டம்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள டைம்ஸ் சதுக்கத்தில் புத்தாண்டை வரவேற்கும் விழா உற்சாகமாக தொடங்கியுள்ளது.
வண்ணமயமான வாணவேடிக்கைகள், இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றுடன் நடைபெறும் டைம்ஸ் சதுக்க புத்தாண்டு கொண்டாட்டம் உலகளவில் மிகப் பிரபலமான ஒன்றாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு வரவேற்பை காண லட்சக்கணக்கான மக்கள் இங்கு திரள்கின்றனர்.
நள்ளிரவில் கீழிறக்கப்படும் பிரம்மாண்டமான கிறிஸ்டல் பந்து இந்த நிகழ்ச்சியின் முக்கிய ஈர்ப்பாகும். இதனை முன்னிட்டு, டைம்ஸ் சதுக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.