இந்தியாவுக்கு மரியாதை – லலித் மோடி மன்னிப்பு
இந்தியாவை இழிவுபடுத்தும் வகையில் வெளியான வீடியோ தொடர்பாக, தொழிலதிபர் லலித் மோடி தற்போது மன்னிப்பு கோரியுள்ளார். மத்திய அரசின் கடும் நடவடிக்கைகளுக்குப் பின்னரே அவர் இந்தக் கருத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
சமீப நாட்களில், லலித் மோடி தனது இன்ஸ்டாகிராம் கணக்கில், விஜய் மல்லையாவின் பிறந்தநாள் விழாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு காணொளியைப் பகிர்ந்திருந்தார்.
அந்தக் காணொளியில், மத்திய அரசு மற்றும் இந்தியாவின் சட்ட அமைப்புகளை வெளிப்படையாக நகைச்சுவையாக விமர்சிக்கும் வகையிலான காட்சிகள் இடம்பெற்றதாக சர்ச்சை எழுந்தது.
இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்திய நாட்டுக்கு தாம் மதிப்பளிப்பதாக தெரிவித்த லலித் மோடி, தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்டுள்ளார்.