17 அம்ச கோரிக்கைகளுடன் செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
சென்னை அண்ணா நகரில் அமைந்துள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத் துறையைச் சேர்ந்த பணியாளர்கள் தங்களது 17 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகம் இடைநிலை சுகாதார பணியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கண்டன போராட்டத்தில், சமமான பணிக்கு சமமான சம்பளம் வழங்க வேண்டும், கொரோனா காலத்தில் மேற்கொண்ட சேவைக்கு உரிய ஊதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கலந்து கொண்டதால், தொழிலாளர் ஆணையர் அலுவலக வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.