ஜனநாயகன்’ பட இசை வெளியீட்டு விழா கோலாகலம்
நடிகர் விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா, மலேசியாவில் மிகச் சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது.
அரசியலில் நேரடியாக ஈடுபட இருப்பதாக அறிவித்த பிறகு, தனது திரை வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க உள்ளதாக விஜய் தெரிவித்திருந்தார். அதன்படி, இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படமே அவரது இறுதிப் படமாக பார்க்கப்படுகிறது.
வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள இந்தப் படத்துக்காக, விஜய்யின் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா, மலேசியா கோலாலம்பூரில் உள்ள புக்கீட் ஜலீல் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், திரையுலகின் பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டதுடன், லட்சக்கணக்கான ரசிகர்களும் திரளாக பங்கேற்றனர். விஜய்யின் கடைசி படம் என்பதால், இந்த விழா வெறும் இசை வெளியீட்டு நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல், அவரது நீண்ட திரைப்பயணத்தை கொண்டாடும் விழாவாகவும் அமைந்தது.