அசாமில் வரைவு வாக்காளர் பட்டியலில் 11 லட்சம் பெயர்கள் நீக்கம்
அசாம் மாநிலத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், சுமார் 11 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெயர் விடுபட்டவர்கள் அல்லது நீக்கப்பட்டவர்கள், இதற்கு ஆட்சேபனை பதிவு செய்யவும் அல்லது மீண்டும் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கவும் ஜனவரி 22ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு அசாம் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 10ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.