பார்வையாளர்களுக்கு மழைக்கோட் வழங்கிய இசை விழா
மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற இசை வெளியீட்டு நிகழ்ச்சியின் போது திடீரென மழை பொழியத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சியைத் தொடர்ந்து ரசிக்க வசதியாக, அங்கு வந்திருந்த அனைத்து பார்வையாளர்களுக்கும் மழைக்கோட் வழங்கப்பட்டது. மழைக்கோட்டை அணிந்தபடியே அவர்கள் நிகழ்ச்சியில் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
இந்த இசை வெளியீட்டு விழாவில், அட்லீ, லோகேஷ் கனகராஜ், நெல்சன் உள்ளிட்ட முன்னணி திரைப்பட இயக்குநர்கள் பங்கேற்றனர். நடிகர் விஜய்யுடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்களை அவர்கள் நினைவுகூர்ந்ததுடன், விஜய்யுடன் சேர்ந்து குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.
மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் ஒளிரும் கைப்பட்டைகள் (hand band) வழங்கப்பட்டன. அனைவரும் அதனை அணிந்து ஒளிரச் செய்ததால், முழு அரங்கமும் வண்ண ஒளியில் கண்ணை கவரும் வகையில் ஜொலித்தது.
இதற்கிடையே, விஜய்யின் ரசிகர்கள் உற்சாகமாக “TVK, TVK” என முழக்கமிட்டனர். அதைக் கவனித்த விஜய், இந்த நிகழ்வில் அந்தக் கோஷங்களை தவிர்க்குமாறு கையசைவால் ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.