கலிஃபோர்னியாவில் உயர் மின்னழுத்தக் கம்பி விழுந்ததில் தீ விபத்து – 4 பேர் காயம்
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம், சான் பெர்னார்டினோ பகுதியில், உயர் மின்னழுத்தக் கம்பி வீட்டின் மீது விழுந்தது, இதனால் தீப்பற்றி, வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். அந்தச் சம்பவத்தில், வீட்டில் சிக்கித் தவித்த 4 நபர்களையும் மற்றும் 5 நாய்களையும் பாதுகாப்பாக மீட்டனர்.
தீ விபத்திற்கான காரணத்தை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.