உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் உருவான MRI ஸ்கேனர் – நாட்டுக்கு அர்ப்பணம்
பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம், இந்தியாவில் முழுமையாக உருவாக்கப்பட்ட MRI ஸ்கேனரை தயாரித்து, அதை நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளது.
மத்திய அரசின் ஆதரவுடனும், ஜோஹோ நிறுவனத்தின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடனும், வோக்சல்கிரிட்ஸ் என்ற பெங்களூரு ஸ்டார்ட் அப் நிறுவனம் இந்த MRI ஸ்கேனரை உருவாக்கியுள்ளது. முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த மருத்துவ சாதனம், தற்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இந்த MRI ஸ்கேனர் சந்திரபூர் புற்றுநோய் அறக்கட்டளையில் நிறுவப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் MRI கருவிகளுடன் ஒப்பிடும்போது, இந்த உள்நாட்டு தயாரிப்பின் விலை சுமார் 40 சதவீதம் குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ மின்சாதனத் துறையில் இந்தியாவின் திறனை வெளிப்படுத்தும் முக்கிய முன்னேற்றமாக இந்த முயற்சி பார்க்கப்படுவதோடு, ‘ஆத்ம நிர்பார் பாரத்’ திட்டத்தின் குறிப்பிடத்தக்க சாதனையாகவும் இது கருதப்படுகிறது.