அமெரிக்க வானில் தென்பட்ட விசித்திரமான ஒளி – வைரலாகும் காணொளி
அமெரிக்காவின் வானப்பகுதியில் பிரகாசமாக ஒளிர்ந்தபடி ஒரு அசாதாரணமான பொருள் வேகமாக நகர்வதைப் போல் தோன்றும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
பூமியைத் தவிர இந்தப் பரந்த பிரபஞ்சத்தில் வேறு கிரகங்களில் உயிரினங்கள் இருக்கிறார்களா என்ற கேள்விக்கு விடை தேடும் முயற்சியில் உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அடையாளம் காண முடியாத பறக்கும் பொருட்கள், பறக்கும் தட்டுகள், ஏலியன் இயக்கங்கள் போன்ற தகவல்கள் அவ்வப்போது வெளியாகி, மக்களிடையே ஆர்வத்தையும் ஆவலையும் அதிகரித்து வருகின்றன.
எனினும், இவ்வகை நிகழ்வுகளுக்கு இதுவரை உறுதியான அறிவியல் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. அதே சமயம், தென் அமெரிக்காவைச் சேர்ந்த சிலி நாட்டின் வானில், பிரகாசமான ஒளியுடன் ஒரு மர்மமான பொருள் பறந்து சென்றது போன்ற காணொளி பதிவு சமீபத்தில் வெளியாகி, பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.