ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்புகள் தீவிரமாக நிறுவல் – ஆப்ரேஷன் சிந்தூர் 2.0 தொடங்குமா?

Date:

ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்புகள் தீவிரமாக நிறுவல் – ஆப்ரேஷன் சிந்தூர் 2.0 தொடங்குமா?

ஆப்ரேஷன் சிந்தூர் 2.0 மூலம் இந்தியா மீண்டும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்தில், பாகிஸ்தான் ராணுவம் எல்லைப் பகுதிகளில் புதிய ஆளில்லா விமான (ட்ரோன்) எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்புகளை அவசரமாக நிறுவி வருகிறது. இதுகுறித்த விரிவான செய்தித் தொகுப்பு இதோ.

பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், Harpy, Harop ஆகிய ஆளில்லா விமானங்களுடன் Warmate, SkyStriker, Nagastra போன்ற நவீன தாக்குதல் ட்ரோன்களையும் பயன்படுத்தியது. இந்த தாக்குதலுக்குப் பிறகு போரை நிறுத்துமாறு பாகிஸ்தான் கோரியதைத் தொடர்ந்து, ஆப்ரேஷன் சிந்தூர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இருப்பினும், இந்தியாவுக்கு எதிரான எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்பாடுகளில், அசிம் முனீர் தலைமையிலான பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

கடந்த அக்டோபர் 10ஆம் தேதி, டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்குப் பின்னால், பாகிஸ்தானைச் சேர்ந்த தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, ஆப்ரேஷன் சிந்தூர் வெறும் முன்னோட்ட நடவடிக்கையாகும் என்றும், அது 88 மணி நேரத்தில் முடிக்கப்பட்டதாகவும், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்தாவிட்டால், அந்த நாடே உலக வரைபடத்தில் இருந்து அழிந்துவிடும் என்றும் இந்திய ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி கடுமையாக எச்சரித்திருந்தார்.

அதோடு, ஆப்ரேஷன் சிந்தூர் 2.0-க்கு இந்திய ராணுவம் தீவிரமாகத் தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதற்கிணங்க, முப்படைகளின் ஒருங்கிணைந்த போர் ஒத்திகைகள் மற்றும் தீவிரமான போர்ப் பயிற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், பாகிஸ்தானின் ஒவ்வொரு பகுதியும் பிரம்மோஸ் ஏவுகணையின் தாக்குதலுக்குள் இருப்பதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்த எச்சரிக்கை, பாகிஸ்தானின் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில்தான், பாகிஸ்தான் ராணுவம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு முழுவதும் 30-க்கும் அதிகமான பிரத்யேக ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்புகளை நிறுவியுள்ளது. முர்ரி பகுதியில் உள்ள 12வது காலாட்படைப் பிரிவும், கோட்லி–பிம்பர் பகுதிகளை கட்டுப்படுத்தும் 23வது காலாட்படைப் பிரிவும் இணைந்து இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ரஜோரி, பூஞ்ச், நௌஷேரா, சுந்தர்பனி ஆகிய பகுதிகளில் 2வது ஆசாத் காஷ்மீர் படைப்பிரிவும், கோட்லியில் 3வது ஆசாத் காஷ்மீர் படைப்பிரிவும், பிம்பர் பகுதியில் 7வது ஆசாத் காஷ்மீர் படைப்பிரிவும் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை செயல்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் நிறுவியுள்ள பாதுகாப்பு அமைப்புகளில் ‘ஸ்பைடர்’ எனப்படும் ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த அமைப்பு, சிறிய சுற்றித் திரியும் வெடிமருந்து ட்ரோன்கள் முதல் பெரிய அளவிலான ஆளில்லா விமானங்கள் வரை, சுமார் 10 கிலோமீட்டர் தூரம் வரை கண்டறியும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது.

இதற்கு கூடுதலாக, தோளில் சுமந்து பயன்படுத்தும் ‘சஃப்ரா’ எனப்படும் ட்ரோன் ஜாமிங் துப்பாக்கியையும் பாகிஸ்தான் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. சுமார் 1.5 கிலோமீட்டர் வரம்பில் செயல்படும் இந்த கருவி, ட்ரோன்களின் கட்டுப்பாடு, வீடியோ பரிமாற்றம் மற்றும் ஜிபிஎஸ் இணைப்புகளை முடக்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுவரை நடைபெற்ற அனைத்து இந்தியா–பாகிஸ்தான் போர்களிலும், இந்தியாவே மேலாதிக்கம் செலுத்தியுள்ளதாக பாதுகாப்பு நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பாகிஸ்தான் காஷ்மீரை கைப்பற்ற முடியாமல், கிழக்கு பாகிஸ்தானை முழுமையாக இழந்ததே வரலாறு. நான்கு போர்களிலும் இந்தியாவை முதலில் தாக்கிய பாகிஸ்தான், இறுதியில் தோல்வியடைந்து சரணடைவதே அதன் வழக்கமாக இருந்து வந்ததாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

17 ஆண்டுகளுக்குப் பிறகு தாய்நாட்டில் கால்தடம் வைத்த தாரிக் ரஹ்மான் – இந்திய உறவுகளில் மாற்றம் ஏற்படுமா?

17 ஆண்டுகளுக்குப் பிறகு தாய்நாட்டில் கால்தடம் வைத்த தாரிக் ரஹ்மான் –...

ஆசிரியர் இல்லத்தில் 103 சவரன் தங்க ஆபரணங்கள் திருட்டு!

ஆசிரியர் இல்லத்தில் 103 சவரன் தங்க ஆபரணங்கள் திருட்டு! கோவை நகரில் உள்ள...

பள்ளி விடுமுறையால் கொடைக்கானலில் சுற்றுலா கூட்டம் – போக்குவரத்து நெரிசல் உச்சம்

பள்ளி விடுமுறையால் கொடைக்கானலில் சுற்றுலா கூட்டம் – போக்குவரத்து நெரிசல் உச்சம் கொடைக்கானல்...

மண்பாண்ட கலைஞர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? – பொங்கல் தொகுப்பில் மண் பானை சேர்க்குமா தமிழக அரசு?

மண்பாண்ட கலைஞர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? – பொங்கல் தொகுப்பில் மண் பானை...