அறிவியலும் தர்மமும் எதிர்மறை அல்ல – மோகன் பாகவத்
அறிவியல் மற்றும் தர்மம் ஆகிய இரண்டுக்கும் இடையில் எந்தவிதமான முரண்பாடும் இல்லை என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருக்கோயிலுக்கு சென்ற அவர், அங்கு சுவாமி தரிசனம் மேற்கொண்டார். அதன் பின்னர் நடைபெற்ற பாரதிய விஞ்ஞான மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய மோகன் பாகவத், அறிவியல் மற்றும் தர்மம் ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாடு நடைமுறை முறைகளில் மட்டுமே இருப்பதாகவும், அடிப்படையில் இரண்டும் ஒரே குறிக்கோளை நோக்கி பயணிக்கின்றன என்றும் விளக்கினார்.
மேலும், அறிவியலும் தர்மமும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல என்றும், மனித வாழ்க்கையை எளிதாக்கும் வசதிகளை உருவாக்குவதில் அறிவியல் முக்கிய பங்காற்றுகிறது என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.