திருப்பதி கோமந்திர் வளாகத்தில் கோ பூஜை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வழிபாடு
திருப்பதி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள கோமந்திர் வளாகத்தில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கோ பூஜை செய்து வழிபாடு மேற்கொண்டார்.
ஏழுமலையான் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக அவர் திருப்பதிக்கு வந்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, மலை அடிவாரத்தில் உள்ள கோமந்திர் வளாகத்திற்குச் சென்ற மோகன் பகவத், அங்கு பசுக்களுக்கு சிறப்பு பூஜை செய்து ஆன்மிக வழிபாட்டில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து, காலை நேரத்தில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி உடன் இணைந்து, மோகன் பகவத் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.